பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிலவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், பிலிப்பைன்சின் தெற்கே மின்டானோ தீவில் டாவோ நகரை மையம் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலத்தடியில் 59 கி.மீ ஆழத்தில், 6.9 ரிக்டர் அளவாக பதிவானது, இதனால் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் சுனாமி ஏற்படலாம், எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக சக்தி வாய்ந்த அலைகள் தாக்கலாம் என பசிபிக் சுனாமி மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers