ஜனாதிபதியின் ஒரே மகளுக்கும் சாதாரண நபருக்கும் நடந்த திருமணம்: என்ன காரணம் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

Rwanda நாட்டின் ஜனாதிபதியின் ஒரே மகளின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றுள்ளது.

Rwanda நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக இருப்பவர் பவுல் ககாமே. இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், அங்கி ககாமே என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி பவுலின் மகள் அங்கி, பில்லி என்பவரை காதலித்து வந்தார். பில்லி நகரத் திட்டமிடல் அதிகாரியாக உள்ளார்.

இதையடுத்து தனது மகளின் காதலுக்கு ஜனாதிபதி பவுல் பச்சைக்கொடி காட்டிய நிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருப்பு நிற அழகியாக திகழும் அங்கி, திருமண உடையில் இளவரசியாக காட்சியளித்தார்.

அதே போல மணமகன் பில்லி வெள்ளை நிறத்திலான பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தார்.

இருவருக்கும் திருமணம் நடைபெற்ற பின்னர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காக்கி உடை அணிந்த பெண்கள் அசத்தலாக நடனமாடினர்.

இந்த திருமணத்தில் ஜனாதிபதி பவுல் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்