குரங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பெண்: வைரல் வீடியோவால் கிடைத்த தண்டனை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

குரங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பெண்ணிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், குரங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் விதத்தில் இளம்பெண் ஒருவர் நடந்துகொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் பரவியது.

இதற்கு விலங்கின ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து கடந்த அக்டோபர் மாதம் 25 வயதான பாஸ்மா அகமது என்ற இளம்பெண்ணை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று வழக்கினை விசாரித்த நீதிபதி, பொது இடத்தில் ஆபாச குற்றத்தில் ஈடுபடுதல் மற்றும் விலங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாஸ்மா, அன்றைய தினம் குரங்கினை சுறுசுறுப்பாக்கவே தான் அதுபோன்று நடந்து கொண்டதாகவும், மற்றபடி எந்த பாலியல் நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers