விசித்திர நோயால் உயிருக்கு போராடும் 10 வயது சிறுவன்! ஜனாதிபதி புதின் அளித்த ஆச்சரியம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனின் ஆசையை, ஜனாதிபதி விளாடிமிர் புதின் நிறைவேற்றியுள்ளார்.

தெற்கு ரஷ்யாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தீவிரமான நோய் தாக்குதலுக்கு ஆளாகியதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இவனுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் கைக்குலுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகும்.

இச்சிறுவன் 'Dream with me' எனும் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறான். இந்நிலையில் இளைஞர் ஒருவரின் மூலம் சிறுவனின் ஆசை ஜனாதிபதி புதினுக்கு தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தலைநகர் கிரம்ளினில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அச்சிறுவன் அழைக்கப்பட்டான். அங்கு சிறுவனை உபசரித்த புதின், அவனது ஆசையை நிறைவேற்றினார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers