கரடியை செல்லப்பிராணியாக வளர்த்த நபர்: அவரையே கொன்று தின்ற கரடி.. அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் நபர் ஒருவர் கரடியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நிலையில் வளர்த்த நபரையே கரடி கடித்து தின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sergey Grigoriyev (41) என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கரடி குட்டிகள் இரண்டை கண்டெடுத்த நிலையில் அதை கூண்டில் வைத்து வளர்த்து வந்தார்.

பின்னர் ஒரு கரடி குட்டியை காட்டில் விட்ட Sergey இன்னொரு குட்டியை மட்டும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பழமொழிக்கேற்ப, தன்னை வளர்த்த Sergey-ஐ கொன்று கரடி தின்றுள்ளது.

அவரின் எலும்புகள் வரை கரடி தின்றது. இந்நிலையில் Sergey-ஐ காணாமல் தவித்த அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தான் Sergey கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது. இதோடு அவர் வளர்த்த ஒரு நாய் குட்டியையும் கரடி கொன்று தின்றுள்ளது.

இதையடுத்து ஆக்ரோஷமான அந்த கரடியை சமீபத்தில் வனவிலங்கு துறையினரும், பொலிசாரும் சேர்ந்து சுட்டு கொன்றனர்.

ஏற்கனவே கரடியானது Sergey-ஐ தாக்கியுள்ளது, இது குறித்து நண்பர்கள் எச்சரிக்கை செய்தும் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers