காதலனால் 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 16 வயது நீச்சல் வீராங்கனை! அதிர்ச்சி பின்னணி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 16 வயது நீச்சல் வீராங்கனை தனது காதலனால் 30 முறை கத்தியால் குத்தப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோல்யட்டி நகரைச் சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை சஃபியா அஸ்கரோவா(16). வெள்ளிப்பதக்கம் வென்றவரான இவர், உயரடுக்கு நீச்சல் வீரரான நிகிடா மலிஜினை காதலித்து வந்தார். ஆனால், மலிஜின் நீச்சலில் பெரிதளவில் சாதித்ததில்லை.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற தனது கனவிற்காக, மலிஜினை தவிர்த்து வந்துள்ளார் சஃபியா. இதனை அவரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மலிஜின், தன்னை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், சஃபியா அதனை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த மலிஜின் கத்தியைக் கொண்டு சஃபியாவின் கழுத்து, மார்பு, வயிறு என உடலில் 30 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில், தங்களிடம் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற மகளை காணவில்லை என சஃபியாவின் பெற்றோர் தேடியுள்ளார்.

அதன் பின்னர் கடந்த 23ஆம் திகதி இரவு 10 மணியளவில் சஃபியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிசார், மலிஜினை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணையில் மலிஜின் கூறுகையில், ‘நாங்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவளிடம் பிரிய வேண்டும் என்று கூறினாள். நான் அவளை சமாதானம் செய்ய முயற்சித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

அவளை கத்தியால் குத்திவிட்டு வெளியே எடுத்தேன். அவள் ஓட முயற்சித்தாள். ஆனாலும் நான் அவளை கத்தியால் குத்தினேன். பின்னர் கத்தியை எங்கேயோ தவறவிட்டு விட்டேன். முதலில் நான் என்ன செய்தேன் என்பதை உணரவில்லை. வீட்டுற்கு செல்லும் வழியில் தான் நான் அதை உணர்ந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

சஃபியா கடந்த ஆண்டு அனைத்து ரஷ்யன் இளையோர் சாம்பியன்ஷிப்பில், பட்டர்பிளை பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் சஃபியாவின் நண்பர்கள் கூறுகையில், சஃபியா சக போட்டியாளர் ஒருவரிடம் நெருக்கம் காட்டியதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers