இந்தோனேஷிய சுனாமி: வங்கா பாபாவின் கணிப்பு மீண்டும் பலிக்கத் தொடங்கிவிட்டதா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை துல்லியமாக கணிக்கும் கண்பார்வையற்றவரான பல்கேரியாவின் வங்கா பாபாவின் கணிப்பு பலிக்க தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தூண்டியுள்ளது இந்தோனேஷியாவை மீண்டும் குலுக்கியுள்ள சுனாமி.

ரஷ்ய அதிபர் புடின் மீதான தாக்குதல், அமெரிக்க அதிபரின் கேட்கும் திறன் இழப்பு உட்பட ஏராளமான விடயங்களை கணித்துக் கூறியுள்ள வங்கா பாபா, ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடுகளின் பல பகுதிகள் காணாமல் போகும் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைதுவம்சம் செய்த சுனாமி 430 பேரை பலி வாங்கியுள்ளதோடு 159 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பாபாவின் கணிப்புக்களை உற்று நோக்கி வருவோரை, அவரது கணிப்புகள் உண்மையாகத் தொடங்கி விட்டனவோ என்ற அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

இன்னொரு பக்கம் ஐரோப்பா காணாமல் போகும் என வங்கா பாபா கூறியது பிரெக்சிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர்.

அதை உறுதி செய்வதுபோல் பிரெக்சிட் தொடர்பான சம்பவங்கள் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.

அதன் பிறகு தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோதுதான் தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

ரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் என்றும், ஐரோப்பா பயனற்ற நிலப்பகுதியாகும் என்றும் 1979ஆம் ஆண்டு கூறியிருந்தார் பாபா.

பனியைப்போல எல்லாம் கரைந்துபோகும், ஒன்றே ஒன்று நிலைக்கும், அது புடினின் மகிமை, ரஷ்யாவின் மகிமை என்று கூறியிருந்தார் பாபா.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers