13 வயதில் கடத்தல்.. 32 வருடங்களாக பாலியல் அடிமையாக இருந்த பெண்! தற்போது எப்படியுள்ளார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

13 வயதில் கடத்தப்பட்டு 32 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 1987ஆம் ஆண்டு தனது 13 வயதில், 50 வயது நபரால் கடத்தப்பட்டார்.

அந்த பெண்ணின் மூத்த சகோதரியும் உடன் கடத்தப்பட்ட நிலையில் இருவரையும் அந்த நபர் Bolivia நாட்டுக்கு அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட மூன்று மாதத்தில் மூத்த சகோதரி அங்கிருந்து தப்பி தனது சொந்த நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் இளைய சகோதரி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். இப்படி 32 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டார் அப்பெண்.

தற்போது 45 வயதாகும் அப்பெண்ணுக்கு 9 வயது மகன் உள்ளான். இந்நிலையில் 32 ஆண்டுகள் கழித்து அப்பெண்ணும் அவரின் மகனும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

Bolivia-வில் நடக்கும் குற்றங்களை தடுக்க நாடு முழுவதும் அதிரடி படையினர் சோதனை நடத்திய நிலையிலேயே அப்பெண் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட பின்னர் தாயும், மகனும் நலமாக இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 2008லிருந்து அர்ஜண்டினாவை சேர்ந்த 12000 பெண்கள் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers