வெளிநாட்டில் பணிக்கு சென்ற தமிழர் கத்தியால் குத்தி கொலை: திடுக்கிடும் பின்னணி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

போலாந்துக்கு வேலைக்கு சென்ற இடத்தில் தமிழக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (25) இவர் டிப்ளமோ படித்திருந்த நிலையில், சென்னையிலுள்ள ஒரு ஏஜெண்சி மூலம் போலாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு, வெர்சா என்ற பகுதியில் ஜீஸ் நிறுவனம் ஒன்றில் பராமரிப்பு பணியில் சேர்ந்தார். கடந்த 45 நாட்களாக இவர் பணியாற்றி வந்துள்ளார்.

ஏஜெண்சி மூலம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்து வெங்கடேசன் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெங்கடேசன் வீட்டிற்கு பேசாததால் அவரின் உறவினர்கள் செல்போனுக்கு தொடர்புகொண்டனர்.

ஆனால் வெங்கடேசன் தொலைபேசியை எடுக்காததால், அவரை பணிக்கு அனுப்பிய ஏஜெண்சியை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் மறு நாள் (திங்கட் கிழமை) விசாரித்த போது, வெங்கடேசன் தங்கியிருந்த அறையில் சண்டையை விலக்க சென்றதாகவும், அப்போது, அவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வெங்கடேசனின் மனைவி கலைச்செல்வி கைக்குழந்தையுடன் ஊர் மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளியிடம் மனு அளித்தார்.

அதில், வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை மீட்டுத் தருமாறும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு, உரிய நஷ்டஈட்டை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை பெற்றுகொண்ட அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers