பதவியேற்ற 10வது நாளில் கணவருடன் பலியான பெண் ஆளுநர்! நீடிக்கும் ஹெலிகாப்டர் விபத்து மர்மம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் பெண் ஆளுநர் தனது கணவருடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பியூப்லா மாகாணத்தின் ஆளுநராக கடந்த டிசம்பர் 14ஆம் திகதி மார்த்தா எரிக்கா அலோன்சா(45) பதவியேற்றார்.

பான் கட்சியின் உறுப்பினரான எரிக்கா, அமைச்சரான தனது கணவர் ரபேல் மொரினோ வல்லேவுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

அப்போது பியூப்லாவுக்கு அருகே இவர்கள் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் இருவருமே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிக்கா தான் ஆளுநராக பதவியேற்ற 10வது நாளிலேயே விபத்தில் பலியான சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் முக்கிய பிரபலங்கள் பலர் இதே போல் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி வருவது அந்நாட்டினை அதிர வைத்துள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பிளேக் மோராவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் ஒருவரும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர்.

இந்நிலையில் எரிக்கா-ரபேல் மரணத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி ஆண்டிரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்