கதவை திறந்தபோது பாய்ந்து வந்த என்னை அடித்து சென்ற அலை: திக் திக் நிமிடங்களை பகிர்ந்த இந்தோனேஷிய பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவின் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகடோவா என்ற எரிமலை, வெடித்து சிதறியதால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக செராங் மற்றும் சவுத் லம்பாங் ஆகிய பகுதிகளைச் சுனாமி தாக்கியதில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுனாமி தாக்கி திக் தித் நிமிடங்களை யுனி என்ற பெண் பகிர்ந்துள்ளார். இரவு நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியில் பலத்த சத்தம் கேட்டது. வெறும் காற்று என நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களில், சத்தம் மிக அருகில் கேட்டது.

உடனடியாகச் சென்று நான் கதவைத் திறந்தேன். நான் கதவைத் திறக்கவும் தண்ணீர் என் வீட்டில் நுழைந்து, என்னை அடித்துச்சென்றுவிட்டது.

பிறகு, அங்கிருந்து மிகவும் சிரமப்பட்டு தப்பி வந்தேன் என கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு சுனாமி தாக்க வாய்புள்ளதாக இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...