மகன் கண்முன்னே உயிரைவிட்ட தந்தை.. மரணவிளிம்பில் சொன்ன கடைசி வார்த்தை: நேர்ந்த அதிசயம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பனிச்சறுக்கு வண்டியோடு நீரில் மூழ்கி தந்தை இறந்த நிலையில், அவரின் 3 வயது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.

Khabarovsk நகரை சேர்ந்தவர் யுவ்கினி வல்சவ் (53). இவர் தனது 3 வயது மகனுடன் பனிக்கட்டிகள் அதிகம் படர்ந்துள்ள பகுதிக்கு சென்றார்.

பின்னர் பனிச்சறுக்கு வண்டியை தனியாக ஓட்டியபடி இருந்தார்.

அப்போது ஒரு இடத்தில் பனிக்கட்டிகள் மேலே மட்டும் படர்ந்திருந்த நிலையில் உள்ளே ஆழமான தண்ணீர் சூழ்ந்துள்ளது.

அதை கவனிக்காத வல்சவ் பனிச்சறுக்கு வண்டியை அங்கு செலுத்திய நிலையில் நீரில் மூழ்க தொடங்கினார்.

இதையடுத்து தந்தை வல்சவின் அருகில் அவரது 3 வயது மகன் வந்து கொண்டிருந்தான்.

இதை பார்த்து பதறிய வல்சவ், நீ இங்கு வராதே, நீரில் மூழ்கிவிடுவாய் வீட்டுக்கு போய் விடு என கூறினார்.

அந்த இடத்தில் மைனஸ் 30 டிகிரியில் குளிர் இருந்த நிலையில் 3 வயதே ஆன சிறுவன், தனது தந்தையின் வார்த்தையை புரிந்து கொண்டு தனியாக உயிர் தப்பி தனது இருப்பிடத்துக்கு அருகில் சென்றுள்ளான்.

அதே நேரத்தில் வல்சா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் வீட்டின் அருகில் வழிதெரியாமல் தவித்து கொண்டிருந்த சிறுவனை, அந்த பகுதியில் இருந்த நபர் பத்திரமாக வீட்டில் சேர்த்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...