துபாய் இளவரசி உயிருடன் தான் இருக்கிறார்: புகைப்படங்கள் வெளியானது

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

காணாமல் போனதாக கருதப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்.

இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார்.

ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித்தார்.

ஆனால் அவரது திட்டம் குறித்த தெரியவந்த துபாய் அரச குடும்பம் துரிதமாக செயல்பட்டு சர்வதேச கடற்பகுதியில் வைத்து இளவரசியை கொடூரமாக தாக்கி மீண்டும் துபாய் நாட்டுக்கே இழுத்துச் சென்றது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஷேக் லதிஃபா தனது குடும்பத்தினருடன் இல்லத்தில் வசித்து வருவதாக கூறியது.

எனினும் இதனை நிரூபிக்குமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உட்பட அவரது நலம் விரும்பிகளும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது அவரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே கடந்த யூன் மாதம், தான் கடும் சித்ரவதை அனுபவிப்பதாக இளவரசி வீடியோவை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers