270 பேரை காவு வாங்கிய விமான விபத்தில் உயிர் தப்பிய 2 முக்கிய பிரபலங்கள்: வெளியான உண்மைத் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்காட்லாந்தின் லோக்கர்பி நகரில் 259 பயணிகளுடன் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட விமானத்தில் இருந்து 2 முக்கிய பிரபலங்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.

குறித்த விமான விபத்தில் சிக்க வேண்டிய சிறுவனை அவனது சகோதரியின் கிறிஸ்துமஸ் பரிசு எவ்வாறு காப்பாற்றியது என்ற தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜேர்மனியின் Frankfurt நகரில் இருந்து 259 பயணிகளுடன் Pan Am விமானம் ஒன்று லண்டன் மற்றும் நியூயார்க் வழியாக டெட்ராய்ட் நகருக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி புறப்பட்டு சென்றுள்ளது.

ஆனால் குறித்த விமானமானது ஸ்காட்லாந்தின் லோக்கர்பி நகருக்கு மேலே 31,000 அடி உயரத்தில் பறக்கும்போது, அந்த விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்க வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் பலகலைக்கழக மாணவர்கள் 35 பேர் கொத்தாக கொல்லப்பட்டனர். லோக்கர்பி நகர மக்களில் 11 பேர் இந்த விபத்தில் சிக்கி கொல்லப்பட்டனர்.

இதனால் மரண எண்ணிக்கை 270 என அதிகரித்தது. இந்த விபத்து தொடர்பில் 3 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்கு பின்னர் எப்.பி.ஐ லிபிய உளவுத்துறை அதிகாரி Abdelbaset al-Megrahi என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவரை மனிதாபிமான அடிப்படையில் ஸ்காட்லாந்து அரசு அவரது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியது.

இந்த விமான விபத்தில் இருந்து பிரித்தானிய பாடகரும் இசையமைப்பாளருமான Johnny Rotten அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தன்று அவரது மனைவி பயணத்திற்கு தயாராவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த விமானத்தை இவர்கள் தவறவிட்டுள்ளனர்.

இன்னொருவர் Sex in the City தொடரில் நடித்த Kim Cattrall. இவரும் நியூயார்க் செல்ல குறித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் தனிப்பட்ட காரணங்களால் கடைசி நிமிடத்தில் தமது முன்பதிவை ரத்து செய்துள்ளார் நடிகை Kim Cattrall.

இவர்கள் மட்டுமல்ல, லோக்கர்பி நகரில் குடியிருந்த அப்போது 14 வயதான Steven Flannigan என்ற சிறுவனும் இந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தின்போது தமது சகோதரிக்கு கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை வாங்கும் பொருட்டு ஸ்டீவன் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

ஆனால் லோக்கர்பி நகருக்கு மேலே வெடித்துச் சிதறிய குறித்த விமானமானது ஸ்டீவனின் குடியிருப்பில் வந்து விழுந்துள்ளது.

இதில் ஸ்டீவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில் லிபியா அரசால் 2.1 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக ஸ்டீவனுக்கு பின்னர் வழங்கப்பட்டடது.

துரதிஷ்டவசமாக ஸ்டீவன் தனது 26-வது வயதில் ரயில் மோதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers