ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்: கசிந்த ஆவணங்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது, 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஈவா எக்கேவார்ரியா என்பவர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், `நான் 11 வயது முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வருகிறேன்.

அதனால் எனக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், `ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 417 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது,

இந்த பிரச்சனை முடிந்து மீண்டும் ஜான்சன் நிறுவனம் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற ஆரம்பித்தது. இந்நிலையில், மீண்டும் இந்த பவுடர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 1999 ஆம் ஆண்டு டார்லீன் என்ற பெண்மணி தனக்கு வந்துள்ள நுரையீரல் புற்றுநோய்க்கு ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) துகள்களை நுகர்ந்ததுது தான் காரணம் என தெரியவந்தது.

அவர் சிறு வயது முதல் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளைத்தான் பயன்படுத்தி வருகிறார். எனவே, ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், அவரால் போதிய ஆதாரங்களை திரட்ட முடியாத காரணத்தால் இந்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு டார்லீன் தேடிக்கொண்டிருந்த ஆவணங்கள் தற்போது வெளியே கசியத் தொடங்கியுள்ளன.

1972-ம் ஆண்டிலிருந்து 1975 வரையிலான இடைவெளியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் வேவ்வேறு ஆய்வகங்களில் மூன்று முறை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு முடிவுகளில் சில சாம்பிள்களில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களுக்காகத்தான் டார்லீன் மரணப்படுக்கையிலும் போராடினார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் துகள்கள் கலந்திருப்பது அந்நிறுவனத்துக்கு 1972-ம் ஆண்டே தெரிந்திருக்கிறது என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எங்கள் தயாரிப்புகளில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இல்லை. ராய்டர்ஸ் நிறுவனம் ஒருசார்பாகச் செய்தி வெளியிட்டுள்ளது’ என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers