அமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு: தடயவியல் அறிக்கையில் தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கிருக்கலாம் என தடயவியல் அறிக்கை தெரிவித்துள்ளது.

மியாமியைச் சேர்ந்த Carla Stefaniak கொலையில் கைதான Bismark Espinosa Martinez என்னும் செக்யூரிட்டி கார்டு மட்டுமல்லாது இன்னும் சிலரும் சேர்ந்தே அவரைக் கொலை செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

கோஸ்டா ரிக்காவில் தங்கியிருந்த Stefaniakஐ குறைந்தது நான்கு பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயலும்போது, எதிர்த்துப் போராடிய அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தடயவியல் அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அவற்றில் ஒரு கத்தி மற்றும் ஒரு இரும்பு பைப் ஆகியவற்றால் தாக்கப்பட்ட Stefaniak, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Stefaniak தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நான்கு பேருடன் போராடியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பொலிஸ் விசாரணையில், Stefaniak தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர் கொடுத்த ரகசிய தகவலில், அவர் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையிலிருந்து, அதாவது Stefaniak தங்கியிருந்த அறையிலிருந்து பலரது குரல்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers