பிறந்தநாளில் காதலியை கொலை செய்து 4 நாட்களாக சடலத்தை வைத்து காதலன் செய்த காரியம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பிறந்தநாளில் காதலியை கொலை செய்து சடலத்தை 4 நாட்களாக சோபாவில் அடைத்து வைத்திருந்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த Evgeny Malakhov என்ற 25 வயதான நபர் தன்னுடைய காதலி மெரினா அப்துலினாவை (31) பிறந்தநாளன்று குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய சடலத்தை வீட்டிலிருந்த சோபாவிற்கு உட்பகுதியில் மறைத்து வைத்துவீட்டு வெளியில் சென்றுள்ளார்.

வீட்டிற்கு திரும்பும் நேரமெல்லாம் சடலத்தை வெளியில் எடுத்து வைத்திருந்துவிட்டு, வெளியில் கிளம்பியதும் பழையபடி அதே இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கை 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. மகனின் நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த தாய், மெரினா எங்கே என கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்.

ஆரம்பத்தில் மழுப்பியவாறு பதில் தெரிவித்த Evgeny, சிறிது நேரம் கழித்து மெரினாவை கொலை செய்து சோபாவில் அடைத்து வைத்திருப்பது பற்றி தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அந்த சடலத்தை தினமும் வெளியில் எடுத்து என்ன செய்தார் என்பது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers