பகலில் பொலிஸ், இரவில் சீரியல் கில்லர்: சைபீரியா நாட்டவருக்கு இரண்டாவது ஆயுள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பகலில் பொலிசாகவும் இரவில் சீரியல் கில்லராகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்த ஒரு நபருக்கு நேற்று இரண்டாவது முறையாக ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.

சைபீரியாவைச் சேர்ந்த பொலிசான Mikhail Popkov, இரவு நேரங்களில் தனது பொலிஸ் வாகனத்தில் பயணிப்பார்.

இரவில் எந்தப் பெண்ணாவது நடமாடினால் அந்தப் பெண்ணுக்கு தனது காரில் லிஃப்ட் தருவதாக கூறி அழைப்பார்.

பின்னர் அந்த பெண்ணை ஒரு சுத்தியல் மற்றும் கோடரியின் உதவியால் கொலை செய்வார். அந்த உடல்களை காட்டில் அல்லது ரோட்டோரத்தில் அல்லது உள்ளூர் இடுகாட்டில் போட்டு விடுவார்.

அந்த பெண்களில் 10 பேரை அவர் வன்புணர்வும் செய்துள்ளார்.

பிடிபட்டபோது, தான் சமுதாயத்தை சுத்தம் செய்பவன் என்றும், தனது ஊரை பாலியல் தொழிலாளிகளே இல்லாத ஊராக மாற்றவே இவ்விதம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Popkov கொன்றவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் 16 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், அந்த மற்றொருவர் ஒரு பொலிஸார்.

தடயங்கள் நேர்த்தியாக அழிக்கப்பட்டிருந்ததால் கொலையாளியைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக இருந்தது, ஒரு வேளை பொலிசார் ஒருவர் இந்த கொலைகளைச் செய்திருப்பாரோ என்ற எண்ணம் தடயவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது.

DNA சோதனைகளையும் காரின் டயர் தடத்தையும் குறிவைத்து ஆய்வுகள் மேற்கொண்டபோது Popkov சிக்கினார்.

எந்த சமூகமுமே ஒழுங்கற்ற பெண்களின் நடத்தையை கண்டிக்கத்தான் செய்யும் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் Popkov.

22 பெண்களை கொலை செய்தது Popkovதான் என்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 2015ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருக்கும்போதே 1992க்கும் 2007க்கும் இடையில் அவர் 56 கொலைகளைச் செய்ததாக உறுதி செய்யப்பட்டதையடுத்து Popkovக்கு இரண்டாவது முறையாக இன்னொரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers