நடுவானில் செயலிழந்த பயணியின் இதயம்: அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மஸ்கட்டில் இருந்து பாங்காக் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணிக்கு திடீரென இதயம் செயலிழந்ததால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹரினை சேர்ந்த கலீபா ரஷீத் (65) என்பவர் மஸ்கட்டில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் வந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலீபாவுக்கு திடீரென நடுவானில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து விமானமானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக கலீபா அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இதய செயலிழப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் விமானமானது ஒன்றரை மணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...