ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டு பின் ஊழியர் செய்த செயல்! வீடியோவைக் கண்டு Zomato அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோவையடுத்து ஜோமேட்டோ நிறுவனம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அந்த வீடியோவைக் கண்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

குறித்த வீடியோவில் ஜொமோட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மூடி அதை அப்படியே எடுத்து செல்கிறார்.

இந்த சம்பவத்தை மாடியின் மேல் இருந்த நபர் ஒரு வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

மேலும் இந்த வீடியோவைக் கண்ட பலரும் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்பவர்களே உஷாராக இருங்கள் என்று இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜோமேட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணவை சேர்க்க வேண்டியது எங்களுடைய கடமை, இனி உணவுப் பாக்கெட்டுகளின் மீது tamper proof tapes பயன்படுத்தி பேக் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers