வீராங்கனை பட்டம் வென்ற சிறுமி: பாத்டப்பில் சடலமாக கிடந்த பரிதாபம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் தற்காப்பு கலை வீராங்கனை பட்டம் வென்ற சிறுமி, பாத்டப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 15 வயதான இரினா ரைன்பிகோவா என்ற சிறுமி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய சாம்பியன்ஷிப்பை வென்றதோடு, நாட்டின் தேசிய அணிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், குளிக்க சென்ற அவர், பாத்டப்பில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய குடும்பத்தார் கூறுகையில், இரினா குளிக்கும் போது அருகில் ஐபோனை சார்ஜ் போட்டிருந்தார். குளித்துக்கொண்டிருக்கும் போது, போன் தவறி பாத்டப்பில் விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

அவருடைய இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், உலக சாம்பியனாக வேண்டும் என இரினா கனவு கண்டதாக அவருடைய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers