கடற்கரையில் சடலமாக கிடந்த இளம்பெண் வழக்கில் இந்தியருக்கு தொடர்பு?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆஸ்திரியா நாட்டு கடற்கரையில் சடலமாக இறந்து கிடந்த இளம்பெண் வழக்கில் இந்தியருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டோயா காடிலி என்ற 24 வயது இளம்பெண் கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.

ஆனால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டிற்கு திரும்பவில்லை. உடனே கடற்கரைக்கு சென்ற டோயாவின் தந்தை ட்ராய், கடற்கரையில் மகள் சடலமாக கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், டோயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும்போது எந்த தடயமும் கிடைக்காததால், பொலிஸார் பெரிதும் குழம்பினர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சடலம் கண்டுபிடிக்கப்பட்ட மறுநிமிடமே அங்கிருந்து, மருத்துவ பணியாளராக பணியாற்றி வரும் ஒரு ஆண் வேகமாக உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பியதால் பொலிஸார் சந்தேகிக்க ஆரம்பித்தனர்.

தற்போது அந்த நபர் ஒரு இந்தியர் என தெரிவித்துள்ள பொலிஸார், வழக்கில் ஏதேனும் பாலியல் சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புகின்றனர்.

அந்த நபரை நாடு முழுவதும் வலைவீசி தேடி வரும் பொலிஸார், இளம்பெண்ணின் டிஎன்ஏ தர ஆய்வுகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers