கணவர் கண்முன்னே துடிதுடிக்க இறந்த புது மணப்பெண்! சோகமாய் முடிந்த கொண்டாட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கையில் கணவர் கண் முன்னே புதிதாய்த் திருமணம் செய்துகொண்ட பெண் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப் டவுன் நகரில் ஞாயிறன்று தமது 31-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் புதுமணப் பெண்ணான Jolandi le Roux.

அன்று மாலை தமது கணவருடன் இணைந்து கேப் டவுன் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட Jolandi தமது கணவரை புகைப்படம் எடுக்க பணிந்துள்ளார்.

ஆனால் சம்பவத்தின்போது கால் தவறிய Jolandi அப்பகுதியில் உள்ள 500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பதறிப்போன அவரது கணவர் ஆண்ட்ரூ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்றும் நோக்கில் அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளார்.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், Jolandi-ன் உடல் சிக்கியிருக்கும் பகுதிக்கு 9 மீற்றர் தொலைவில் எதுவும் செய்ய முடியாத தவிப்பில் ஆண்ட்ரூ நின்றிருப்பதை கண்டுள்ளனர்.

மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி Jolandi-ன் சடலத்தை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

மேலும் 3 மணி நேரம் போராடியே அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஆண்ட்ரூ மற்றும் Jolandi ஆகிய இருவரின் திருமணம் நடந்துள்ளது.

சாகசங்களில் ஆர்வம் கொண்ட இருவரும், தற்போது விபத்து நடந்த பகுதியிலேயே மலை ஏறுவதும், மிதிவண்டியில் சுற்றிவருவருவது என ஓய்வு வேளைகளை செலவிட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய தமது மனைவியை மீட்க முடியாமல் போனது மிகவும் வருத்தமளிப்பதாக கூறும் ஆண்ட்ரூ, ஆனால் அந்த பள்ளத்தில் மேலும் முன்னோக்கி செல்வது தற்கொலைக்கு சமம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers