புனிதத்தலம் முன் நிர்வாண போஸ் கொடுத்த இளம் ஜோடி: வலைவீசி தேடும் எகிப்தின் உயர் அதிகாரிகள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

டென்மார்க்கைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று எகிப்தின் புனிதத்தலமாக கருதப்படும் புராதன பிரமிடு ஒன்றின்முன் நின்று நிர்வாணமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படமும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாக, எகிப்திய உயர் அதிகாரிகள் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி எகிப்தின் மிகப்பழமையான பிரமிடுகளில் ஒன்றும், புராதன கால ஏழு அதிசயங்களில் ஒன்றுமான Great Khufu Pyramid of Giza என்னும் பிரமிடில் ஏறி நிர்வாணமாக புகைப்படமும் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இரவில் பதிவு செய்யப்பட்ட, மூன்று நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு ஆணும் பெண்ணும் அந்த பிரமிடில் ஏறுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பிரமிடில் ஏறியதும், அந்த இளம்பெண் சட்டையைக் கழற்றுகிறார், இறுதியாக அவர்கள் இருவரும் நிர்வாணமாக கட்டியணைத்தபடி நிற்கும் ஒரு போட்டோவுடன் வீடியோ முடிவுக்கு வருகிறது.

புராதன நினைவுச் சின்னங்களுக்கு பொறுப்பு வகிக்கும் எகிப்திய அமைச்சரான Khaled al-Anani, இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை எகிப்தின் மிக உயர்ந்த விசாரணை அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

எகிப்தில் பிரமிடுகளில் ஏறுவதே சட்டப்படி குற்றமாக கருதப்படும் நிலையில், புனிதத்தலமாக கருதப்படும் ஒரு பிரமிடின் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்த ஜோடியின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers