பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்: வாய் பிளக்க வைக்கும் நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடான லக்ஸம்பெர்க் தனது குடிமக்கள் அனைவருக்கும் பேருந்து, ரயில் மற்றும் ட்ராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் உலகின் முதல் நாடாக குடிமக்கள் அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து இலவசம் என லக்ஸம்பெர்க் அறிவித்துள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளுடன் எல்லையைப் பகிரும் நாடான லக்ஸம்பெர்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை 560,000.

இந்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் பேருந்து, ரயில், ட்ராம்கள் என அனைத்துப் பொது போக்குவரத்தின் கட்டணங்களும் முழுமையாக நீக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கூட அதிகக் கட்டணம் இருந்தது கிடையாது. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனமானாலும் இரண்டு மணி நேர பயணத்துக்கு 2 யூரோக்கள் மேல் செலவாகாதாம்.

அதே போல் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தாலும் 4 யூரோக்கள் மேல் செலவாகாது எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடிப்படைக் கட்டணம் கூட இருக்கக் கூடாது என இலவசப் பயணங்களை அறிவித்துள்ளது லக்ஸம்பெர்க்.

இதன் மூலம் மக்கள் தனியாக வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்து நோக்கி வருவர் என்றும் இதனால் நாட்டின் முக்கியப் பிரச்னையான போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாட்டின் மக்கள் தொகை 560,000 தான் என்றாலும் இந்த சிறிய நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் 180,000 மக்கள் பணி நிமித்தமாகப் பயணிக்கின்றனராம்.

இதனால் இந்த இலவசத் திட்டம் நிச்சயமாக மக்களுக்கும் அரசுக்கும் பயனளிக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.

மட்டுமின்றி லக்ஸம்பெர்க் நாட்டில் 1000 பேரில் சுமார் 662 பேர் சொந்தமாக கார் வைத்திருக்கின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம் என்பது 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers