விசா கொடுக்க மறுப்பு: இறந்துபோன மகளின் உடலை பார்க்க போராடும் தந்தை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இறந்துபோன தனது மகளின் இறுதிசடங்கை பார்ப்பதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளதால் அப்பெண்ணின் தாய் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

Guatemalan நாட்டில் வசித்து வரும் Naimeh Salem என்பவரின் 13 வயது மகள் Hania Aguilar கரோலினாவில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்ட இந்த சிறுமி, சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது செல்ல மகளின் இறுதிசடங்கிற்கு செல்வதற்காக Naimeh Salem விசா கோரியுள்ளார்.

ஆனால், அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது, இதனை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட மனைவி, தனது கணவனுக்கு விசா கொடுப்பதற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியதால், சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், பலர் தரப்பில் இருந்து இவர்களுக்கு ஆதரவு வந்துள்ளது. சிறுமியின் கொலைக்கான காரணத்தை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

தனது மகளின் இறுதிசடங்கில் தான் கலந்துகொள்ள வேண்டும் என்றும் செல்ல மகளின் இழப்பை தாங்கிகொள்ள முடியவில்லை என தந்தை கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...