ஆறு பெண்களை திருமணம் செய்து கொண்டது ஏன்? நபரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் குடியேற்ற சலுகைகளை பெற்று தருவதற்காக 6 ஆப்பிரிக்க பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ் (57). இவர் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை 6 ஆப்பிரிக்க பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 2015 இறுதியில் பொலிசிடம் அவர் சிக்கினார்.

பீட்டர் அளித்த வாக்குமூலத்தில், ஆறு பெண்களை திருமணம் செய்வதற்காக எனக்கு பணம் கொடுத்தார்கள்.

ஆனால் அந்த பெண்கள் என் மூலம் குடியேற்ற சலுகைகளை பெறதான் இவ்வாறு செய்தார்கள் என எனக்கு தெரியாது என கூறினார்.

அமெரிக்கரை திருமணம் செய்யும் பெண்கள் முதலில் கிரீன் கார்டு வாங்கிய பின்னர் நிரந்தர குடிமகனாக ஆகமுடியும்.

இதை அடிப்படையாக வைத்தே திருமண நாடகம் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனிடையில் பீட்டர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பீட்டருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்க அரசு சார்ப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

ஆனால் நீதிபதி டிமோடி ஹில்மென் அளித்துள்ள தீர்ப்பில், பீட்டரை இரண்டாண்டுகள் தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...