ரஷ்யாவில் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்தவனிடம் இருந்து காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்த சிறுவன் 19 மாதங்களுக்கு பின் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 15 வயது சிறுவன் வன்யா கிராபீவின், சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம்போல பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளான்.
வீட்டிலிருந்து தாய் அலறும் சத்தம் கேட்டு வேகமாக சென்றுள்ளான். அங்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ரோமன் ப்ரானின் என்ற 35 வயதான நபர், தன்னுடைய தாயை கத்தியால் குத்தி பலாத்காரம் செய்ய முயல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளான்.
உடனே எதிர்த்து சண்டையிட்டு தாயை காப்பாற்ற முயன்ற போது, ரோமன் காத்தியாலும், உடற்பயிற்சி செய்யும் எடை பொருளாலும் கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளான்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு திடுக்கிட்ட பக்கத்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 25 கத்திக்குத்து காயங்களுடன் தரையில் மயங்கிய நிலையில் கிடந்த மகனையும், தாயையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட சில மாதங்களிலே சிறுவன் தாய் நடாலியா கிராபீவினா (43) குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆனால் மூளைப்பகுதியில் பலத்த காயமடைந்த வன்யா, கோமா நிலைக்கு சென்றான். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நடாலியா அதன்பிறகு இரண்டு முறை மட்டுமே மகனை வந்து பார்த்ததாக தெரிகிறது.
ஆனால் ரஷ்யாவில் உள்ள பல்வேறு சிறந்த மருத்துவர்களின் உதவியால், ஒரு வருடத்தில் சிறுவன் கோமா நிலையில் இருந்து மெதவாக திரும்பினான். விரைவில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவர்கள் குழுவும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக வன்யா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இந்த நிலையில், துணிந்து காப்பாற்ற முயன்ற மகனின் அருகில் கூட இருந்து கவனிக்காத தாயை இணையதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொலை முயற்சி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 14 சிறைத்தண்டனை வகித்து வரும் குற்றாவளி ரோமன் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.