கணவனை பொலிசில் சிக்க வைக்க மனைவி செய்த மோசமான செயல்: காட்டிக் கொடுத்த வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவரை பொலிசில் சிக்க வைத்த ஒரு பெண், தனது முகத்தில் காணப்பட்ட காயங்களை அதற்கு ஆதரமாக காட்டியுள்ளார்.

இணையதளம் மூலம் சந்தித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Faisal Khan, மொராக்கோவைச் சேர்ந்த Asmae.

சிட்னியைச் சேர்ந்த Faisalக்கு, திருமணமாகி எட்டு மாதங்களுக்குப்பிறகு, தன் மனைவி அவுஸ்திரேலிய விசாவுக்காகத்தான் தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகம் ஏற்படவே, ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கோரியிருக்கிறார்.

இந்த விடயம் தெரியவந்ததும் தான் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் ஏற்படவே, ஆத்திரமுற்ற Asmae, Faisalஇடம் சண்டை போட்டதோடு, அவரை மிரட்டியிருக்கிறார்.

ஒரு நாள் இரவு வீடு திரும்பிய Faisal, வீடு அலங்கோலமாக கிடப்பதைக் கண்டிருக்கிறார்.

அவரிடம் நீ பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறிக்கொண்டே ஓடிய Asmae, லிஃப்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

சில மணி நேரங்களுக்கு பிறகு பொலிசார் வந்து Faisal இருந்த வீட்டின் கதவைத் தட்டி, அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

தான் என்ன செய்தேன் என குழம்பிப் போன Faisal, தான் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்ததோடு, வழக்கு செலவுக்காக 20,000 டொலர்களும் செலவிட்டிருக்கிறார்.

லிஃப்டில் என்ன நடந்தது என்பதை அறிய மணிக்கணக்காக, நூற்றுக்கணக்கான CCTV காட்சிகளை பார்வையிட்ட Faisal, சில காட்சிகளை பார்த்து அதிர்ந்து போனார்.

அவற்றில் ஒன்றில் Asmae லிஃப்டுக்குள் ஓடி, கதவுகள் மூடும்வரை காத்திருந்து, பின்னர் தனது முகத்தில் தானே குத்திக் கொள்ளும் கட்சிகள் பதிவாகியிருந்தன.

அவள் முகத்தில் இடது கையால் குத்துவதால் அவளது கண் மற்றும் கன்னத்தில் காயம் ஏற்படுகிறது.அதைத் தொடர்ந்து இன்னொரு காட்சியில், பொலிசாரிடம் புகாரளிப்பதற்காக அவள் வீட்டை விட்டு ஓடும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ கிடைத்த தகவல் வெளியானதையடுத்து Asmae தலைமறைவாகி விட்டாள். அவளைக் கண்டுபிடித்து மொராக்கோவுக்கு நாடு கடத்த வேண்டும் என தற்போது Faisal பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers