உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் வயாகரா மோதிரம் ஏலம்: எத்தனை டொலர்?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர் கடந்த ஆண்டு தனது 91 வயதில் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததையடுத்து, அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மெர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டொலருக்கு விற்பனையானது.

வயாகரா மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டொலருக்கு விலை போனது.

ஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers