கை, கால் இல்லாமல் சிதைந்து கிடந்த மீனவரின் உடல்: பிடிபட்ட ராட்சத முதலை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மீனவரின் கை, கால்களை கடித்து தின்ற ராட்சத முதலையை வனவிலங்கு புகலிடம் மற்றும் மீட்பு மைய அதிகாரிகள் லாவகமாக பிடித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவான் மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிதைந்த நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கை, கால்கள் இல்லாத நிலையில் இருந்த அந்த சடலம் பற்றி விசாரிக்கையில், அதேபகுதியை சேர்ந்த 33 வயதான கார்னீயோ போனோட் என்ற மீனவரின் சடலம் என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நேரத்தில், சனிக்கிழமையன்று 15 அடி நீளத்தில், 498கிகி எடையில் ராட்சத முதலை ஒன்று அப்பகுதியில் இருந்து பிடிபட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், முதலையின் வயிற்றுப்பகுதியை பார்த்து, மீனவரின் உடல்பாகங்களை முதலை சாப்பிட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் சம்மந்தப்பட்ட ஏரிப்பகுதியில் அதிகமான முதலைகள் நடமாட்டம் இருப்பதால், மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்ற இடம் இதுவல்ல என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அந்த முதலையை கைப்பற்றிய அதிகாரிகள், அதன் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்வதற்காக பியூர்டோ பிரின்சஸ் நகரத்திற்கு எடுத்து சென்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்