ரஷ்யாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு சிறுவர்கள், அதிவேகத்தில் காரை செலுத்தி பொலிசாரை கொலை செய்யும் வீடியோ காட்சியினை வெளியிட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யாவின் செச்சினியா மாகாணத்தில் கடந்த ஆகஸ்டு மாதம், சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று பொலிஸார் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு, அருகாமையில் இருந்த மற்றொரு பொலிஸ் வாகனத்தின் மீதும் மோதி சேதம் ஏற்படுத்தி சென்றது.
இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதோடு, ஒரு பெண் பொலிஸ் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் அங்கிருந்த தப்பி சென்ற காரினுள் இருந்து திடீரென வெடிகுண்டு வெடித்தது. உடனடியாக பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உள்ளிருந்த 11 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து காருக்கு அருகில் சென்ற பொலிஸார் உள்ளே இரண்டு இவர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அப்போது முகம்மது-அமீன் அஹ்மத்ஹானோவ் என்ற 11 வயது சிறுவன் கத்தியை காட்டி, மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்றினை கைப்பற்றினர்.
அதில் ஐஎஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அந்த சிறுவன் கையில் ஒரு கத்தியை முத்தமிட்டவாறு, "ரத்தத்தின் மூலம் அல்லாஹ்வின் பெயரை கைப்பற்றுவதற்காக தான் என்னை படைத்தார்" என கூறியுள்ளான்.
அதனை தொடர்ந்து, அவர்கள் என்னுடைய சகோதர, சகோதரிகளை கொன்றுவிட்டனர். விரைவில் உங்கள் அனைவரின், தலையை வெட்டி எடுப்பேன் என எதிரிகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில், காமிராவின் பின்புறமாக ஒரு நபர் நின்று கொண்டு கேள்வி கேட்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ள பொலிஸார், செச்சினியாவில் தற்போது 'சிறுவர் பயங்கரவாதத்தின்' அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.