இறந்து பிறந்த குழந்தை.... மார்போடு அணைத்துக் கொண்ட பிரபல மொடல்: இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இறந்து பிறந்த தமது குழந்தையை மார்போடு அணைத்தபடி பிரபல ரஷ்யா மொடல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ரஷ்யாவின் புகழ்பெற்ற மொடல்களில் ஒருவரான Yana Yatskovskaya என்பவரே தமது இறந்து பிறந்த குழந்தையை மார்போடு அணைத்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஆறு மாதம் கர்ப்பமாக இருந்தபோது கணவர் மற்றும் 3 வயது மகளுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் இயக்கம் நின்றுவிட்டதாக அவருக்கு மனதில் பட்டுள்ளது.

இதனையடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார் யான. அப்போது குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் உடனடியாக மாஸ்கோவுக்கு பறந்த யான மருத்துவமனைக்கு செல்லாமல் குடியிருப்பிலேயே பிள்ளையையும் பெற்றெடுத்தார்.

இதுவும் பெரும் வாக்குவாதத்தில் முடிந்த நிலையில், இதுவரை உரிய விளக்கத்தை அவரால் வெளியிட முடியவில்லை.

பிள்ளை பெற்றெடுத்ததும் பிறந்த குழந்தையின் உடலை மார்போடு அணைத்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிஞ்சு குழந்தைகளை இழந்து தவிக்கும் ஒவ்வொரு தாய்மார்களுக்காகவும் அந்த புகைப்படத்தை வெளியிட்டதாக யான குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலியில் இருந்து தாம் எப்போது விடுதலையாவேன் என தெரியாது என கூறும் அவர் தமது 27 ஆம் வயதில் இதுபோன்ற ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் யான தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers