சர்ச்சையை கிளப்பிய பிரான்ஸ் ஜனாதிபதி- சவுதி இளவரசர் சந்திப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி20 உலகத் தலைவர்கள் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்ட ஜி20 மாநாடு அர்ஜெண்டினாவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்த ஆடியோவை பிரபல ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் இருவரும் ஏமன் போர் பற்றியும், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலையால் சவுதியின் செல்வாக்கு பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் பேசியுள்ளனர். அப்போது மேக்ரான் பேசும்போது, சவுதி எப்போதும் பிரான்சின் பேச்சைக் கேட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதற்கு அவ்வாறு இல்லை என்றும், நான் இதனைப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சவுதி இளவரசர் கூறியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு ஐந்து நிமிடங்கள் நடந்ததாகவும், இந்த விடயம் தற்போது சர்ச்சையை கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏமனில் 6 ஆண்டுகளாக சவுதி மறைமுகமாக நடத்தி வரும் போர் குறித்தும், உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்தும் உலகத் தலைவர்கள் எவரும் ஏன் விமர்சிக்கவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers