5 வயதில் 6 உலக சாதனைகளை முறியடித்த சிறுவன்: கிடைத்த பரிசு என்ன?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் 3,202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறான்.

செசென் குடியரசில் மழலையர் பள்ளியில் பயின்று வரும் ரகிம் குரேயெவ் என்ற 5 வயது சிறுவன், 3202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்துள்ளான்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த செச்சென் குடியரசு தலைவர் ரம்சன் கட்ரோவ் கூறுகையில், சிறுவன் 40 நிமிடங்கள் 57 வினாடிகளில் 1000 தண்டால் எடுத்து முதல் சாதனை படைத்தார்.

1 மணி 30 நிமிடங்கள் 47 விநாடிகளில் 2000 ஆயிரம் தண்டால் எடுத்து இரண்டாவது சாதனை படைத்தார். ஒரு மணி நேரத்தில் 1419 தண்டால் எடுத்தது மூன்றாவது சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து நான்காவதாக 2 மணி நேரத்தில் 2559 முறை தண்டால் எடுத்தார். ஐந்தாவதாக 2 மணி 22 நிமிடங்கள் 09 விநாடிகளில் 3000 தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் சிறுவன் வரும் நாட்களில் அவருடைய சாதனையை அவரே முறியடித்து புக் ஆப் ரஷ்யாவில் இடம்பிடித்தால் அதில் சந்தேகப்படுவதிற்கு வேறெதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, 2 மணி நேரம் 25 நிமிடங்களில் இடைவிடாமல் 4,105 தண்டால் எடுத்து சிறுவன் சாதனை படைத்தான். ஆனால் அப்பொழுது வீடியோவில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அது கணக்கிடபடவில்லை.

இதனை தொடர்ந்து வெற்றியடைந்த சிறுவனுக்கு £28,000 டொலர் மதிப்புள்ள பென்ஸ் கார் அளிக்கப்பட்டதோடு, பொம்மை கடைக்கு சென்று விருப்பப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...