189 பேருடன் கடலில் விழுந்த விமானம்: யாரேனும் உயிர் பிழைத்தார்களா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

189 பயணிகளுடன் கடலில் விழுந்த விமானத்தில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என தேடுதல் மற்றும் மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு 189 பயணிகளுடன் லயன் ஏர் JT 610 விமானம் கடந்த மாதம் புறப்பட்ட நிலையில் கிளம்பிய 13வது நிமிடத்தில் கடலில் விழுந்தது.

இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் இறந்தவர்களின் சடலங்களையும், பொருட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் இவ்விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் அது குறித்து தேடுதல் மற்றும் மீட்பு குழுவின் தலைவர் முகமது சயோகி விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை.

அதனால் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

தண்ணீரில் பலரின் ஐடி கார்டு மற்றும் புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

நீருக்கடியில் ட்ரோன் மூலம் இடிபாடுகளில் சிக்கிய பொருட்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers