செண்டினல் தீவுவாசிகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல: வெளியான தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வட செண்டினல் தீவுவாசிகளால் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல என ஆதாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு, சட்ட விரோதமாக மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட, படகு அலைகளால் செண்டினல் தீவுப் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டது.

அவர்கள் செண்டினல் தீவுவாசிகளால் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்க, அவர்களும் தீவுவாசிகளின் அம்புகளை எதிர் கொள்ள வேண்டி வந்தது.

அந்த மீனவர்களின் உடல்கள் இன்று வரை மீட்கப்படவேயில்லை. அதேபோல் 1981ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் ஒரு இரவு வேளையில் Primrose என்னும் சரக்குக் கப்பல் ஒன்று வட செண்டினல் தீவுப்பகுதியில் உள்ள பவளப் பாறைத் திட்டில் சிக்கிக் கொண்டது.

கப்பல் மூழ்கும் சூழல் ஏற்படவில்லை என்பதால், கப்பலை அங்கேயே நிறுத்திவிட்டு, கப்பலின் கேப்டன் தகவல் தொடர்பு கருவி மூலம் உதவி கோரினார்.

சில நாட்கள் அவர்கள் படகிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட, ஒரு நாள், தீவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மனிதர்கள் வெளிவருவதை கப்பலில் இருந்தவர்கள் கண்டதும், உதவி வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர்கள் நெருங்கி வரும்போதுதான், நிர்வாணமாக கையில் வில், அம்பு, ஈட்டிகளுடன் சுமார் 50 பேர் ஆக்ரோஷமாக வருவதைப் பார்கும்போது அவர்கள் நிச்சயம் உதவிக்கு வரவில்லை என்பது கேப்டனுக்கு புரிந்திருக்கிறது.

நடுநடுங்கிப் போன அவர் உடனடியாக மீண்டும் தகவல் தொடர்பு கருவியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தங்களுக்கு ஆயுதங்கள் தேவை என்றும் தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் பதற்றத்துடன் உதவி கோரியிருக்கிறார்.

சிறு படகுகளை செய்து, அவற்றின் உதவியுடன் சரக்குக் கப்பலை நெருங்க தீவுவாசிகள் முயற்சி செய்ய, தீவை விட்டு அவர்கள் இதுவரை வெளியே வராததாலும், படகு ஓட்ட தெரியாததாலும், அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. சில நாட்கள் திகிலுடன் கழித்த நிலையில், பின்னர் சரியான நேரம் பார்த்து, ஹெலிகொப்டர் உதவியால் அந்த கப்பலிலிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த சரக்குக் கப்பலை இன்றும் கூகுள் மேப்பில் பார்க்கலாம். பின்னர் இந்திய மானுடவியல் நிபுணரான பண்டிட் செண்டினல் தீவுக்கு செல்லும்போது, முதன்முறையாக தீவுவாசிகள் உலோகத்தால் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதைக் கண்டிருக்கிறார், அவை Primrose கப்பலிலிருந்து தீவுவாசிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers