ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞர்: கல்லூரியில் எடுத்த அந்த பயிற்சி... திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அந்தமான் தீவில் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன், கல்லூரியில் நன்கு பயிற்சி எடுத்த பின்னரே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை சந்தித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவில் ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்டார்.

சென்டினல் தீவிற்கு செல்லும் முன் ஜான் ஆலன் எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்க நாளிதழ்களில் வெளியானது. அந்த கடிதத்தில் நான் இங்கே வருவதை வைத்து நீங்கள் என்னை பைத்தியக்காரனாக நினைக்கலாம்.

ஆனால் இயேசு மீது உள்ள அன்பு காரணமாகத் தான் நான் இங்கு வந்தேன். இயேசுவை வழிபடுவது குறித்து நான் இவர்களிடம் தெரிவிக்க போகிறேன் என்று எழுதியிருந்தது.

கன்சாஸ்-அடிப்படையிலான கிறிஸ்துவ மிஷனரி குழு "ஆல் நேஷன்ஸ்" சமீபத்தில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.

அதில் 2017களில் கிறிஸ்துவ மதபோதகராக தன்னை சேர்த்து கொண்ட ஆலன் , சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக கல்லூரியிலிருந்து சிறந்த பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரே அவர் சென்டினல் தீவு அனுப்பப்பட்டுள்ளார், என்றுள்ளது.

ஓரல் ராபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஆலன், அந்த கல்லூரியிலேயே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை கையாளும் முறை பற்றி பயிற்சி பெற்றுள்ளார். முறையான பயிற்சி பெற்ற பின்னரே அந்தமான் தீவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் மிஷனரியை சேர்ந்தவர் தான் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று அந்தமான் பொலிஸ் கூறியுள்ளது.

ஆதிவாசிகளிடம் நெருங்கி உரையாட நினைத்து ஜான் அங்கு சென்றார். அதனால் தான் ஜான் தன் உயிரை பறி கொடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...