இளம் பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு... உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் அந்த இளம் பெண்ணை சாத்தானுக்கு பலியிட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Krasnoyarsk நகரில் குடியிருந்து வருபவர் 22 வயதான Artem Dylkov. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது தோழியான 21 வயது Ilona Yakovleva என்பவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில் இருவரும் ஆளுக்கு கொஞ்சம் மது அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென்று அந்த இளைஞர் இலோனா மீது பாய்ந்து தாக்கியுள்ளார். பின்னர் அவருடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துள்ளார்.

தொடர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அந்த இளம் பெண்ணின் நிர்வாண உடலில் அமானுஷ்ய சின்னங்களை வரைந்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் வேலை நேரம் முடிந்து இலோனாவின் தாயார் குடியிருப்புக்கு திரும்பியபோது தமது மகள் கொலை செய்யப்பட்டு அமானுஷ்ய சின்னங்கள் வரையப்பட்டு அலங்கோலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், இலோனாவில் உடலில் வரையப்பட்ட சின்னங்கள் அனைத்தும் சாத்தான் பூசைக்கு பயன்படுத்துபவை என தெரிவித்துள்ளனர்.

சுமார் ஓராண்டு கால விசாரணைக்கு பின்னர், கைதான Artem Dylkov-கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers