ஸ்பெயின் நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஒற்றைப் புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் அரசர் ஜுவான் கார்லோஸ் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் வைத்து எடுத்துக்கொண்ட ஒற்றைப் புகைப்படம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று அபுதாபியில் நடைபெற்ற பார்முலா வன் கார் பந்தயத்தின்போது இளவரசர் சல்மானுடன் 80 வயதான ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லோஸ் புகைப்படம் ஒன்று வெளியானது.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வெளியிட்ட இந்த புகைப்படத்தை ஸ்பெயின் நாட்டின் முக்கிய பத்திரிகை ஒன்று வெட்கக்கேடான புகைப்படம் என விமர்சித்துள்ளது.

மேலும் ஸ்பெயினின் முக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர், இளவரசர் சல்மானை சந்திப்பதற்கோ புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கோ உகந்த காலமல்ல இது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்பெயின் இடசாரிகள் கட்சியானது, இந்த ஒற்றைப் புகைப்படன் உலக அரங்கில் ஸ்பெயினின் நற்பெயரை களங்கப்படுத்தியுள்ளது என கடுமையாக தாக்கியுள்ளது.

மேலும், அர்ஜென்டீனா நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுங்கோல் ஆட்சி நடத்திய ராணுவ தளபதி Jorge Rafael Videla என்பவருடன் சவுதியின் அப்போதைய மன்னர் கைகுலுக்கும் புகைப்படத்தையும் இணைத்து விமர்சித்துள்ளது.

மட்டுமின்றி, இந்த புகைப்படம் தொடர்பில் ஸ்பெயின் அரச குடும்பம் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் காஷோகி மர்மமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பில் இளவரசர் சல்மானின் பங்கு விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் அரசர் ஜுவான் கார்லோஸ் அவருடன் புகைப்படத்தில் தோன்றியதே இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்