வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்ப்பிணி இந்தியர்: கடற்கரையில் சடலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தின் வெலிங்டன் கடற்கரையில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் நியூசிலாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் ஷேலார் என்பவரின் மனைவி சோனம் என்பது தெரியவந்துள்ளது.

நவம்பர் 17 ஆம் திகதி முதல் சோனம் மாயமானதாக கணவர் சாகர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே வெலிங்டன் கடற்கரையில் மர்மமான முறையில் சோனம் இறந்து கிடந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

5 மாதம் கர்ப்பிணியான சோனம் தனது குடியிருப்பில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான நவம்பர் 17 ஆம் திகதியே கணவர் சாகர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனிடையே வெலிங்டன் கடற்கரையில் இருந்து மர்மமான முறையில் குறித்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

விசாரணையின் ஒருபகுதியாக பல்வேறு கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தாலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உறவினர்களின் வாக்குமூலத்திலும் அது நிரூபணமான நிலையில் பொலிசார் கொலை வழக்கை தற்கொலை வழக்கு என மாற்றியுள்ளனர்.

தற்போது சோனத்தின் உடலை இந்தியா கொண்டு செல்லாமல் நியூசிலாந்திலேயே இறுதிச்சடங்குகளை முடிக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers