குளியல் அறையிலும் கமெரா... மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை: இளம்பெண்களை வேட்டையாடும் சீனா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனா அரசாங்கம் Uighur இஸ்லாமியர்களை தேடித் தேடி வேட்டையாடுவதாகவும் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும் அங்கிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒரு நாடு ஒரு இனம் என்ற கொள்கையை சீனா நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளதாகவும், இஸ்லமியர்களின் முகத்திரை அணிந்தாலோ, அடையாள அட்டைகளை பாதுகாக்க தவறினாலோ கொடூர தண்டனை வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரே தளத்தில் சுமார் 230 இஸ்லாமிய பெண்களை அடைத்து வைத்துள்ளதாக கூறும் 29 வயதான Mihrigul Tursun, தாம் அனுபவித்த கொடுமைகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து 4 நாட்கள் தூங்கவிடாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், தலை முடியை மொத்தமாக மழித்து, மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து மின்சாரம் பாய்ச்சியதாகவும், நிர்வாணப்படுத்தி விசாரணை மேற்கொண்டதாகவும், கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார். சித்திரவதை தாங்க முடியாமல் தம்மை கொன்றுவிடவும் அவர் அந்த அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

ஆங்கில மொழி மீது ஆர்வம் கொண்ட டுர்சுன் எகிப்து நாட்டுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார். அங்கேயே திருமணமும் செய்து கொண்டார். ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.

2015 ஆம் ஆண்டு குடும்பத்தை சந்திக்க சீனாவுக்கு சென்ற டுர்சுன், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டார்.

நீண்ட 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் வெளியே வந்த அவருக்கு தமது குழந்தைகளில் ஒன்று மரணமடைந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை அளித்தது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கைதானார் டுர்சுன். அப்போது 60 பேர் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் தம்மையும் அடைத்ததாக கூறும் டுர்சுன், இடப்பற்றாக்குறையால் இரவுகளில் தூங்குவதே பெரும்பாடு என்றார்.

கழிப்பறை மட்டுமின்றி குளியல் அறையிலும் கமெரா பொருத்தப்பட்டிருந்தது என கூறும் டுர்சுன், கமெராவுக்கு முன்பு நிர்வாணமாக மனம் இடம் தரவில்லை என்பதால் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே குளிப்பதும் களிப்பறை செல்வதும் என்ற நிலை ஏற்பட்டது என்றார்.

மருத்துவ சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக பல மணி நேரம் தனி அறைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன் என கூறும் அவர், வெள்ளை நிற கலவை ஒன்றை நிர்பந்தித்து குடிக்க வைத்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் பலருக்கு உதிர போக்கு ஏற்பட்டது, மட்டுமின்றி சிலரது மாதவிடாய் நின்றுபோனது. தடுப்பு முகாம்களில் தாம் அனுபவித்த சித்திரவதைகள் பயப்படுத்துவதாக உள்ளது என டுர்சுன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Uighur இனத்தில் பிறந்ததே தாங்கள் செய்த பிழை என அந்த அதிகாரிகளில் ஒருவர் வாய்விட்டு சொன்னது தற்போதும் தமது காதுகளில் ஒலிப்பதாக டுர்சுன் தெரிவித்துள்ளார்.

Uighur இஸ்லாமியர்களில் சுமார் 2 மில்லியன் மக்களை சீனாவின் புறநகர் பகுதியில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...