திருமணத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அவனால் எனக்கு நடந்த சம்பவம்...இரண்டு ஆண்டுகளாக நான் பட்ட வேதனை: பெண்ணின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கரீபியன் நாட்டில் சுமார் 30 மில்லியன் செலவில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்ட பெண் தனது திருமண நாள் மறக்க முடியாத மிகவும் மோசமான நாளாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Ashley Reid என்ற பெண் பகிர்ந்துகொண்டதாவது, 2016 ஆம் ஆண்டு Bahamas இல் அமைந்துள்ள சொகுசு ரிசார்ட்டில் எனது காதலன் Jeffrey Pascarella - ஐ திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அங்கு திருமணம் நடக்கவிருந்தது.

திருமண நாளன்று அதிகாலை 2 மணியளவில் நான் எனது ஹொட்டல் அறையில் தூங்கிகொண்டிருந்தேன். எனது காதலர் குளியலறையில் இருந்தார்.

நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, திடீரென எனது அறைக்குள் நுழைந்த நபர், எனது ஆடையை கழற்றி என்னிடம் தவறாக நடந்தார். ஏதோ தவறு நடக்கிறது என்பதை ஆழ்ந்த துறக்கத்தில் இருந்த நான் அறிந்துகொண்டு, உடனே எழுந்து பார்த்தபோது அந்த நபர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டான்.

நான் எழுந்து எனது அறையை சோதனை செய்தபோது, அவன் வெளியே தப்பித்து ஓடிவிட்டான். இந்த சம்பவத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டேன். இதனால் எனது திருமணத்தை நிறுத்திவிடலாம் என காதலனிடம் தெரிவித்தேன்.

ஆனால், அவரோ இந்த சம்பவத்தால் குழம்பிக்கொள்ளாதே, நமது திருமணத்திற்கு 70 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணம் நல்லபடியாக நடக்கட்டும் என கூறி என்னை சமாதானப்படுத்தினார்.

எனது திருமணம் பலரது ஆசிர்வாதத்துடன் நல்லபடியாக நடந்தது, ஆனால் அன்று நடந்த சம்பவம் என்னை பாதித்து Post-traumatic stress disorder - ஆம் என்னை தாக்கியது.

அதாவது, ஏதேனும் ஒரு சம்பவத்தால் மனதளவில் நமக்கு ஏற்படும் பாதிப்பு ஆகும். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக நான் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...