எனக்கு காதலனே கிடைக்கவில்லை: தன்னை விட 24 வயது மூத்த அரசரை மணந்த கவர்ச்சி மொடல் அழகி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவை சேர்ந்த மிஸ் மாஸ்கோ மொடல் அழகி தன்னை விட 24 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்டு மலேசியாவின் ராணியாக மாறியுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரி கோர்பட்னெங்கோ என்பவரின் மகள் ஒக்சானா வோவோடீனா (25).

இவர் கடந்த 2015ம் ஆண்டு மிஸ் மாஸ்கோ பட்டம் வென்றவர். தற்போது பிளெக்கானோ ரஷ்ய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஒக்சானா, மலேசிய அரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் (49) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுடைய திருமணம் நவம்பர் 22 ம் தேதி மாஸ்கோ புறநகரான பாரிவ்காவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் எப்பொழுது சந்தித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 16ம் தேதியன்று ஒக்சானா, இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ரிஹானா என மாற்றிக்கொண்டதாக மலேசிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த மலேசிய வாழ் மக்கள், தங்களுடைய ராணியை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரிஹானா பேசுகையில், நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது, ஒல்லியாக உயரமாக இருந்ததால் அதிகம் கூச்சமடைந்தேன். சகமானவர்களிடம் இருந்து விலகி இருந்தேன்.

ஆனால் அப்பொழுது தான் என்னை அதிகமான ஆண்கள் விரும்பி பார்த்தார்கள். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மொடலிங் துறையில் கால்பதித்தேன். அதன்படி மிஸ் மாஸ்கோ பட்டம் வென்றேன். என்னுடைய தந்தை எனக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. லேசாக என்னை பார்த்து சிரிப்பார்.

எனக்கு இதுவரை காதலன் யாரும் கிடைக்கவில்லை. நான் எதிர்பார்த்த ஒரு ஆணை சந்தித்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்