நடுவானில் பசியால் கதறி அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பணிப்பெண்: குவியும் பாராட்டுக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
336Shares

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் பசியால் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு, தாயின் கண்முன்னே தாய்ப்பால் கொடுத்த விமான பணிப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மனிலாவை சேர்ந்தவர் 20 வயதான பாத்ரிஷா ஆர்கோ.

இவர் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இளம் தாயான பாத்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த போது, பிஞ்சுக்குழந்தை ஒன்று கதறி அழுவதை பார்த்துள்ளார்.

அப்போது விமானம் தரையிலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பொதுவெளியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உகந்த ஆடையை அணிந்து வராததால் என்ன செய்வதென தெரியாமல் குழந்தையின் தாய் திகைத்து கொண்டிருந்துள்ளார்.

விமானம் தரையிறங்க இன்னும் நேரம் இருந்ததால், குழந்தையின் அம்மாவை நோக்கி சென்ற பாத்ரிஷா, நான் உங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தாய் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவே, பாதுகாப்பான ரகசிய அறைக்கு இருவரையும் அழைத்து சென்று அங்கு வைத்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து தற்போது பொதுமக்கள் பலரும் பாத்ரிஷா ஆர்கோவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்