10 வயது மணமகளுக்கு தாலி கட்டிய 8வயது மணமகன்: கொண்டாடிய உறவினர்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரோமானியா நாட்டில் 10 வயது சிறுமிக்கும், 8 வயது சிறுவனுக்கும் திருமணம் நடந்துள்ளது.

பிங்க் நிறத்திலான கவுண் அணிந்திருக்கும் 10 வயது மணப்பெண்ணை சுற்றி வயதானவர்கள் நின்றுகொண்டு பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.

8 வயது மணமகன் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல், தனக்கு நடக்கப்போவது திருமணம் என்பதை அறியாமல், ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறான்.

அதன்பின்னர், அனைவரும் புடைசூழ 8 வயது சிறுவன் 10 வயது சிறுமியின் கழுத்தில் தாலி போன்ற செயினை அணிவித்து விடுகிறான், சமீபகாலமாக ரோமானிய நாட்டில் சிறுவயதில் திருமணங்கள் நடந்து வருவதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

2007 வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் 18 வயதிலும், பெண்கள் 16 வயதிலும் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஆனால், தற்போது அது மீறி நடந்துவருகிறது என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்