சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 13 இலங்கையர்கள்! காரணம் என்ன?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இஸ்ரேலில் தஞ்சம் கோரிய 13 இலங்கையர்களும் உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர், கடந்த மாதம் இஸ்ரேல் நாட்டிற்கு தஞ்சம் கோரி சென்றனர்.

ஆனால், இஸ்ரேல் நாடானது அரசியல் அந்தஸ்து விடயத்தில் பூச்சிய சகிப்புத்தன்மையை கொண்டதாகும். எனவே, இவ்வாறான கோரிக்கைகளை அந்நாட்டு அரசு அங்கீகரிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, குறித்த 13 இலங்கையர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளை குறித்த இலங்கையர்கள் சந்தித்தனர்.

எனினும், விரைவில் அவர்கள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்