லாட்டரியில் பாசக்கார தாய்க்கு அடித்த ஜாக்பாட்: சிறையில் இருந்த மகனை மீட்டெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் லாட்டரியில் ஜாக்பாட் அடித்த தாய், சிறையில் இருந்த மகனை ஜாமீனில் வெளியில் எடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேசன் வெய்ன் கார்லைல், கடந்த 2006ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த ஜேசன், $ 3,000 டொலருக்கு ஒரு தாயிடம் இருந்து சிறுமியை விலை கொடுத்து வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜேசன் குற்றவாளி தான் என 2015ம் ஆண்டு நீதிபதி உறுதி படுத்தினர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31ம் தேதியன்று ஜேசனின் தாய் ஜோன் ஆன்ஸ் (70) லாட்டரியில் வெற்றி பெற்ற $ 15 மில்லியன் பணத்தை கொண்டு மகனை வெளியில் எடுப்பதற்காக முயற்சிகளில் ஈடுபட்டார்.

6-ம் தேதி இதனை கேட்டறிந்த நீதிபதி பலத்த நிபந்தனைகளுடன் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் ஏற்கனவே மெக்சிகோவிற்கு தப்பி செல்ல முயற்சித்ததை நினைவுபடுத்திய நீதிபதி, குற்றவாளியை எப்பொழுதும் கண்காணிக்கும் விதமாக ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 10ம் தேதி நடக்கும் எனவும் கூறி உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்