மானை வேட்டையாட மலை விளிம்புக்கு சென்ற நாய்களுக்கு நேர்ந்த கதி: திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் ஒரு வேட்டைக்காரர் வேட்டை நாய்களைப் பயன்படுத்தி வேட்டையாடும்போது, மான் ஒன்றைப் பிடிக்க முயலும் நாய்கள் மலைமுகட்டுக்கே செல்ல, மானைப் பிடிக்கும் முயற்சியில் பல நாய்கள் அதல பாதாளத்தில் விழும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்கின்றது.

Herreruela என்ற கிராமப் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மானைப் பிடிக்க முயலும் நாய்கள் மலைமுகட்டிலிருந்து ஒவ்வொன்றாக விழுவதைக் கண்ட வீடியோவை எடுக்கும் நபர் அதிர்ச்சியில், ஓடுங்கள், ஓடுங்கள், நாய்கள் விழுகின்றன என்று வேட்டைக்காரரை நோக்கிக் கத்துவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆனால் அவர் கத்துவது காதில் விழாத அந்த வேட்டைக்காரர், மானைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

ஆனாலும் பல நாய்கள் பள்ளத்தில் விழுந்ததோடு, அந்த மானும் பலத்த சத்தத்தோடு பள்ளத்தில் விழுந்து விட்டது.

அந்த நாய்கள் உயிர் பிழைத்ததா என்பது உடனடியாக தெரியாவிட்டாலும், பின்னர் நாய்கள் அருகிலுள்ள விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லபட்டதாக வேட்டையாடுவோர் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த விலங்குகள் நல விரும்பிகள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், வேட்டையாடுவோர் கூட்டமைப்பின் தலைவராகிய Angel Lopez Maraver, விமர்சகர்கள் வேட்டையாடுவதை குற்றம்போல் விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்