புகலிடகோரிக்கையாளர்களுக்கு இனி இது கட்டாயம்: இத்தாலியில் கடும் விவாதத்திற்கு உள்ளான சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் புகலிடகோரிக்கையாளர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்பட வேண்டும் என பிரபல அரசியல் கட்சியான Five Star Movement கோரிக்கை வைத்துள்ளது.

இத்தாலியில் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் என அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என Five Star Movement என்ற அரசியல் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.

மட்டுமின்றி இந்த திட்டத்தை நிதி நிலை அறைக்கையில் உட்படுத்த வேண்டும் எனவும், பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி புகலிட கோரிக்கையாளர்களுக்கும் பாலியல் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கும் இந்த இலவச திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் எனவும் Five Star Movement கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த திட்டமானது அமுல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் யூரோ அளவுக்கு செலவாகும் என கூறப்படுகிறது.

Five Star Movement கட்சியின் இந்த கோரிக்கையானது தற்போது இத்தாலியில் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்தில் இத்தாலிய அரசு மொன்மொழிந்த திட்டம் ஒன்றிற்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த விமர்சனங்களுக்கு காரணம்.

இத்தாலியில் மக்கட்தொகையை அதிகரிக்கும் நோக்கில், 2019 முதல் 2021 வரையான காலகட்டத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் குடும்பத்திற்கு விவசாய நிலங்கள் அளிக்கப்படும் எனவும், இந்த நிலத்தில் 20 ஆண்டுகள் விவசாயம் செய்துகொள்ளலாம் எனவும் இத்தாலி அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்